
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் பத்துப்பேரில் ஏழுபேர் கவலைக்கிடம், திருச்சி அரசினர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








இது குறித்து மேலும் தெரியவருவதாவது
கடந்த 20/05/2022 முதல் திருச்சி சிறப்பு முகாமில் தம்மை தமது குடும்பங்களுடன் சேர்த்து வைக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த பத்து ஈழ தமிழர்ககளில் ஏழு பேரது உடல் நிலை மோசமடைந்த நிலையில் அவர்கள் ஏழு பேரும் நேற்று திருச்சி அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.