அரசியலமைப்பின் 21ம் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இன்று மாலை சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிரிசேன தலைமையில் இன்று சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானத்தை மீறி அண்மையில் அமைச்சுப் பதவியை பொறுப்பெடுத்துள்ள நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தின் போது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிப்பதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.