பாதுகாப்பு காரணங்களுக்காக அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளோம் – ரஷ்யா அறிவிப்பு.

உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தை அதன் அணு எரிபொருள் மற்றும் பொருட்களைப் பாதுகாப்பதற்காக ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.

ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகும், இது உக்ரைனின் அணுசக்தியில் பாதிக்கும் மேலானது எனவும், நாட்டின் மொத்த மின்சார விநியோகத்தில் 20 விகிதத்தை உற்பத்தி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியப் படைகள் மார்ச் 3ம் திகதியன்று ஜபோரிஜ்ஜியா ஆலை மீது ஷெல் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் கட்டுப்பாட்டை எடுத்து. தற்போது அதன் ஆறு உலைகளில் இரண்டு மட்டுமே இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணுசக்தி மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவைத் தடுக்கும் நோக்கில் ஜபோரிஜ்யா அணுமின் நிலையத்தை ரஷ்ய ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் வைப்பது நியாயமானது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என மரியா ஜாகரோவா கூறியுள்ளார்.

சர்வதேச அணுசக்தி முகாமை  கவலை

புளூட்டோனியம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வேறு பயன்பாடுகளுக்குத் திருப்பிவிடப்படவில்லை என்பதைச் சரிபார்க்க ஆலைக்குச் செல்ல விரும்புவதாக சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) அறிக்கையின் பிரதிபலிப்பாக அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் சர்வதேச அணுசக்தி முகமையின் கருத்தை மரியா ஜாகரோவா நிராகரித்துள்ளார்.

யுரேனியம் குறைந்த செறிவூட்டப்பட்டதாகவும், புளூட்டோனியம் செலவழிக்கப்பட்ட எரிபொருளில் இருப்பதாகவும், “பல நாடுகளில் மட்டுமே உள்ள மிகவும் சிக்கலான உபகரணங்களைப் பயன்படுத்தாமல்” பிரிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews