மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சந்தேகநபர்கள் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்த வழக்கை முன்கொண்டு செல்ல போதுமான ஆதாரங்கள் இன்மை காரணமாக வழக்கைத் தள்ளுபடி செய்து பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் பதிலளிக்க சட்ட மா அதிபருக்கு ஜூலை மாதம் 04ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.