கச்சத்தீவை வழங்க முடியாது- சாள்ஸ் நிர்மலநாதன் எம்பி.

கச்சத்தீவை வழங்க முடியாது அதில் உடன்பாடு இல்லை என்னுடைய நிலைப்பாடு
அதுவே என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள்
தெரிவித்துள்ளார்
தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி அவர்களிடம்
தமிழகமுதலமைச்சர் கச்சத்தீவை மீட்ப்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென
கோரிக்கை விடுத்திருந்தார் எனவே இது தொடர்பில் வினவிய போதே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்
வடக்கு தமிழர்கள் குறிப்பாக மீனவர்களின் நிலைப்பாடு கச்சத்தீவை வழங்க
முடியாது என்பதுவே. அது எங்களுடைய மீனவர்களுக்கு பாதிப்பாக அமையும் எனவே
கச்சத்தீவை வழங்கு முடியாது அதற்கான வாய்ப்பு இல்லை. தமிழக முதலமைச்சர்
தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வாறு ஒரு கோரிக்கையினை
விடுத்திருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனத் தெரிவித்த
அவர் தமிழக முதலமைச்சரின் இக் கோரிக்கை தொடர்பில் தமிழக மற்றும் ஈழத்தமிழ்
உறவில் பாதிப்புக்கள் ஏற்படாது, ஒரு விடயத்தில் வெவ்வேறு கருத்துக்கள்
இருக்கலாம் ஆனால் அது உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews