
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அண்மையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரை எதிர் திசையில் தவறான பக்கத்தில் வந்த டிப்பர் வாகனம் மோதி தள்ளியது.
இந்த சம்பவத்தில் முல்லைத்தீவு – முத்துஜயன்கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலை அதிபரான க.சத்தியசீலன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றய தினம் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த பாடசாலை அதிபர் யாழ்.சாவகச்சோியை சேர்ந்தவர் எனவும் தொியவருகின்றது