பொலிஸாருக்கே ஒரு லீற்றர் பெற்றோலை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த பெண்..!

ஒரு லீற்றர் பெற்றோல் 800 ரூபாய்க்கு விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், தனது கணவர் கொண்டு வரும் பெற்றோலையை தான் விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.

பொலிஸ் அதிகாரியொருவர் ஒற்றன் போல் அப்பெண்ணிடம் 800 ரூபாவுக்கு பெற்றோல் கொள்வனவு செய்துள்ளார்.

இதனால், அப்பெண்ணின் கணவர் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து கொண்டு வரும் பெற்‍றோலை 800 ரூபாவுக்கு விற்பனை செய்வது கண்டறிப்பட்டதாக பேருவளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews