சவாரி விடந்தை அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து சிறீதரன் எம்.பி ஆராய்வு.

கிளிநொச்சி சோலைநகரில் நீண்ட காலமாக இருந்து வந்த சவாரி விடந்தையை அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அப் பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் குறித்த விடந்தை அமைந்திருந்த பகுதிக்கு சென்று நேற்று  விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்
உருத்திரபுரம், சிவநகர், சோலைநகர் , ஊற்றுப்புலம், புது முறிப்பு உட்பட பல கிராமங்களில் வசிப்பவர்களால் பல ஆண்டுகளாக இயங்கி வந்த விடந்தை க்குள் திடீரென வனவளத்திணைக்களம் எல்லையிட்டிருப்பதால் பாரம்பரியமாக நடைபெற்று வந்த சவாரிப் போட்டிகள் போன்றவை நடாத்த முடியாமல் இருப்பது தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினருடன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் புதுமுறிப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரும் புது முறிப்பு தமிழரசுக்  கட்சியின் அமைப்பாளருமான தங்கராசா உள்ளிட்ட  கிராமங்களின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews