பயறுச் செய்கையில் ஈடுபடும் 14,000 குடும்பங்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை

பயறு செய்கையில் ஈடுபடும் 14,000 குடும்பங்களுக்கு தலா 18,000 ரூபாயை உதவித்தொகையாக வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி விம்லெம்டா ஷரனுக்கும் இடையிலான சந்திப்பின்போதே இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தப்பில்; நாட்டின் விவசாயத்துறை எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

துணை உணவு பயிர்ச் செய்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் எனவே பயறு செய்கையை ஊக்குவிப்பதற்காக உணவு மற்றும் விவசாய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க உலக உணவுத் திட்டம் இந்த உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews