காலி கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் களப்பு ஒன்றில் நீராடுவதற்கு சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.
சுமார் 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையின பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மாத்தளை கவேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரகிரியாகம பிரதேசத்தில், பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பெண்ணொருவர் நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.
பஹலவௌ, தலகிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.