அம்பாறை உஹன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிமிதுராவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று (29) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உஹன பிரதேசத்தைச் சேரந்த 40 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்டப்டுள்ளார்.
குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.