
இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பிலிப்பிட்டிய கந்துருகஸ் ஆர பிரதேசத்தில், அனுமதிப்பத்திரமின்றி எரிபொருளை தன்வசம் வைத்திருந்த நபர், 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
துங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயது நபரே இவ்வாறு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்தில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், 3,264 லீற்றர் டீசலுடன் சந்தேக நபரை கைதுசெய்தனர்.
குறித்த நபரை எம்பிலிப்பிட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு நீதவான் உத்தரவிட்டார்.