அட்டுலுகம சிறுமி விவகாரம்: விசாரணை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு.

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27) ஆம் திகதி காணாமற்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் தரம் 4இல் கல்வி கற்று வந்த பாத்திமா ஆயிஷh (வயது 9) என்ற சிறுமியே, காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews