நேற்றைய தினம் திடீர் மரணமடைந்த
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பின் வடமராட்சிக்கிழக்கு ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் மேரி பற்றிமா (புஷ்பராணி) அவர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பினர் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
வடமராட்சி கிழக்கு தாளையடி வடக்கை சேர்ந்த
அருளானந்தம் மேரி பற்றிமா என்பவரே திடீர் சுகயீனம் காரணமாக இன்று சாவடைந்துள்ளார் ஒருபிள்ளை,மாவீரர்,மற்றொரு பிள்ளை வலிந்து காணாமல் ஆக்கப்படுள்ளார்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான (அருளானந்தம் ஜோன்ஷன் இதயதாஸ்) கடந்த 2009 ம் ஆண்டு சிங்கள அரசபடைகளால் முள்ளிவாக்காலில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்ட தனது செல்வமகனை அன்பு தாயாரால் காணமுடியாத நிலையில் இன்றைய தினம் சாவடைந்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறிய சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து இன்றுவரை வட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட
மக்கள் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தாயாரே இவ்வாறு சாவடைந்துள்ளார்.
நீதியை வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தாயார்,தந்தையர்கள் சகோதரர்கள் தங்கள் உறவுகளை காண முடியாமல் வடக்கு,கிழக்கில் மட்டும் இதுவரை சுமார் 322 உறவினர்கள் சாவடைந்துள்ள நிலையில் குறித்த தாயாரும் இன்றைய தினம் சாவடைந்துள்ளார்.
எனினும் இவரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்புக்கும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
சர்வதேச விசாரணைக்கான சாட்சியங்கள் நாளுக்கு நாள் மரணிக்கின்றன இந்த நிலையில் நாம் பரந்து பட்ட போராட்ட வெளிகளை உருவாக்க வேண்டும் அதன் ஊடாகவே சர்வதேச விசாரணையை நிலை நாட்ட முடியும்.
எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது