நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு மாநகர சபைக்கு காளாஞ்சி வழங்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று இடம்பெற்றது.
நல்லூர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் இன்று காலை பூசை வழிபாட்டுடன் எடுத்து வரப்பட்டு வழங்கப்பட்டது.
மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர் ஆகியோரிடம் இவை கையளிக்கப்பட்டன.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் 2022-08-02 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தகது.