
போலி கடவுச்சீட்டு வழக்கில் சசி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சிச வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே குறித்த தீர்மானத்தை நீதிமன்றம் அறிவித்தது.
போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில், சஷி வீரவங்சவுக்கு 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்தவாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.