
திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நேற்று மாலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்.க.துரைரெட்ணசிங்கம், தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் திருகோணமலை நகரசபை உறுப்பினருமான அமரர் கோ.சத்தியசீலராஜா, தமிழரசு கட்சியின் குச்சவெளி திரியாய் வட்டார கிளையின் முன்னாள் தலைவர் பொன்னம்பலம் இராமநாதன், கிண்ணியா பைசல் நகர் வட்டாரகிளை முன்னாள் தலைவர் மு.க.மஹ்ரூப் முன்னாள் வில்லூன்டி வட்டாரக்கிளை தலைவர் கனகமகேந்திரா ஆகியோரை நினைவு கூரும் முகமாக குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொதுச்செயலாளர் டாக்டர்.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன்இ. ரா.சாணக்கியன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.