
நாட்டில் எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி குடும்பங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவியுடன் வாழ்வாதார மானிய உதவிப் பணம் இன்று வழங்கப்பட்டன.
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சமூர்த்தி வங்கி கிளையின் முகாமையாளர் திருமதி நிஷாந்தி தயானந்தன் தலைமையில் தம்பிலுவில் சமூர்த்தி வங்கி வளாகத்தில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதன்போது தம்பிலுவில் சமூர்த்தி வங்கி கிளையின் கீழ் உள்ள 2194
சமூர்த்திப் பயனாளிக் குடும்பங்களுக்;கு அவர்களின் சமூர்த்தி கொடுப்பனவு முத்திரையின் தொகையின் அடிப்படையில் சுமார் 67இலட்சம் ரூபா நிதி வாழ்வாதார உதவியாக இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் திருக்கோவில் பிரதேச செயலக சமூர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் சிரேஷ்ட முகாமையாளர் ஏ.அரசரெத்தினம் மற்றும் சமூர்த்தி முகாமையாளர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இவ் நிதியுதவியை வழங்கி வைத்திருந்தனர்.