குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி பலியல்; துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பிற்காக குறித்த பாடசாலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சம்பவ தினமான நேற்று மதியம் 2.30 மணியிலிருந்து குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காணாமல் போன சிறுமி நிந்தவூர் 2 இமாம் கஸ்ஸாலி வீதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க வதுர்தீன் பாத்திமா சஜானா என்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை வளாகத்தில் நின்ற சிறுமி திடிரென அங்கிருந்து காணாமல் சென்று விட்டதாக பாடசாலை காப்பாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.