மட்டு.காத்தான்குடியில் இரண்டாவது அரை இறுதி உதைபந்தாட்ட போட்டி.

மட்டக்களப்பு காத்தான்குடி விக்டரி விளையாட்டு மைதானத்தில் மர்ஹூம் என்.ரி.பாறூக் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி நேற்றிரவு இடம் பெற்றது.

ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கும் காத்தான்குடி சண்ரைஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையில் இடம் பெற்ற இப்போட்டியில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் மூன்று கோள்களை போட்டு வெற்றி பெற்றதுடன் இறுதிப் போட்டிப் போட்டிக்கும் தெரிவானது

இப் போட்டியில் காத்தான்குடி சண்ரைஸ் விளையாட்டுக்கழகம் எவ்வித கோள்களையும் எடுக்கவில்லை.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் 92ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதார உயர்தர பிரிவு மாணவர்களின் அனுசரணையுடன் காத்தான்குடி உதைபந்தாட்ட லீக் நடாத்துகின்ற இச் சுற்றுப் போடட்டியின் இறுதிப் போட்டிக்கு ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகமும், அக்கரைப்பற்று ஹிஜ்ரா விளையாட்டுக்கழகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews