
புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்களை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத திணைக்கள பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
அதற்கமைய 30 தொடக்கம் 65 சதவீதத்தினால் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதலாம் திகதி தொடக்கம் இந்தக் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.