காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உள்ளிட்டவர்கள் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது ரெட்டா தலைமையில் நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இதன்போது நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல், நீதிமன்றத்துக்கு வருகை தருகின்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
நாளை அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான ரதிந்து சேனாரத்ன
இவர் ரெட்டா எனும் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.
அத்துடன் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் முன்னணி செயற்பாட்டாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
ரெட்டாவின் கைதுக்கு எதிராக கம்பனித்தெரு பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.