
நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இராணுவ வாகனம் ஒன்று பால் கொள்வனவு செய்து கொண்டு சென்ற வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, ஒருவர் காயமடைந்துள்ளதோடு கொள்வனவு செய்துகொண்டு சென்ற ஆயிரக்கணக்கான லீட்டர் பாலும் வீதியில் சிதறி வீணாகியுள்ளது.
நெடுங்கேணி பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இராணுவ வாகனம் ஒட்டுசுட்டான் சம்மளம் குளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்குள் திடீரென சமிக்ஞைகள் எதுவும் காட்டாது திருப்ப முற்பட்ட நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த பால் கொள்வனவு வாகனம் இராணுவ வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் கொள்வனவு செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான லீட்டர் பால் வீதியில் சிதறி வீணாகியுள்ளதோடு பால் ஏற்றிய வாகன சாரதியும் காயமடைந்துள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தின் வருகை அதிகமாக காணப்படுவதால் அடிக்கடி இவ்வாறு இராணுவ வாகனங்களோடு ஏனைய வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.