ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சினின் மருமகன் வாலண்டின் யுமாஷேவ், கடந்த மாதம் விளாடிமிர் புடினின் ஊதியம் பெறாத ஆலோசகர் பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை நன்கு அறிந்த இரண்டு நபர்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து விலகியதை வாலண்டின் யுமாஷேவ் ஒப்புக்கொண்டார். எனினும் பதவி விலகலுக்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.
1991 முதல் 1999 வரை ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் கீழ், வாலண்டின் யுமாஷேவ் கிரெம்ளின் ஆலோசகராகவும் பின்னர் ஜனாதிபதி நிர்வாகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். வாலண்டின் யுமாஷேவ் யெல்ட்சின் மகள் டாட்டியானாவை மணந்தார்.
புடினின் ஆலோசகராக முடிவெடுப்பதில் அவர் முக்கிய பங்கு வகிக்கவில்லை, எனினும், யெல்ட்சினின் ஆட்சியில் மீதமுள்ள சில இணைப்புகளில் ஒன்றை அவர் பிரதிநிதித்துவப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.