
ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், துமிந்த சில்வாவை உடன் கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து துமிந்த சில்வாவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக்குழுவொன்று தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.