
குறித்த சம்பவம் அனுராதபுரம் – நாச்சதுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது, சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருதாவது,
கடந்த 25 ஆம் திகதி புதன்கிழமை வரலாறு பரீட்சை வினாத்தாளில் உள்ள கேள்விக்கு விடை சொல்லித் தருகிறேன் என்ற போர்வையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி அன்றைய தினம் பாடசாலையில் உள்ள ஆசிரியை ஒருவரிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து, மறுநாள் தனது பெற்றோருடன் ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜூலை 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபர் புதிய நாச்சதுவ நகரை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது நண்பர்கள் இந்த வழக்கை விட்டுக்கொடுப்பதற்காக மாணவியின் குடும்பத்திற்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாகவும் தெரியவந்துள்ளது.