ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை நினைவு கூரும் முகமாக இன்று புதன்கிழமை நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
1981-ஆம் ஆண்டு 1ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தமிழர்களின் அறிவுப் பொட்டகமான ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
குறித்த நூலகம் தீயிட்டு கொளுத்தப்பட்ட போது சுமார் 90 ஆயிரம் அரியவகை நூல்களும் அரிச்சுவடிகளும் தீயில் எரிந்து நாசமாகியது.
இதனை நினைவு கூரும் முகமாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ் பொது நூலகத்தை ஆரம்பிப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் பொது நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாரும் நினைவு கூறப்பட்டனர்.
இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாரு பிரதி மேயர் ஈசன் மற்றும் ஆணையாளர் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.