
அயல் வீட்டார் தாக்கியதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு தனது மகளின் வீட்டில் வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சில நிமிடங்களில் பெண்ணொருவர் மரணமடைந்த சம்பவம் இன்று வடமராட்சி நெல்லியடி பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வதிரி சந்திக்க அண்மித்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிலிருந்து தனது வீட்டை பார்ப்பதற்கு சென்ற பெண்ணொருவர் தனது வீட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அயல் வீட்டுக்காரர் ஒருவர் தாக்கியதாகவும், இதனைத் தொடர்ந்து குறித்த முதிய பெண்மணி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் அயல் வீட்டுக்காரர் தாக்கியதாக தனது மகளுடன் சென்று முறைப்பாடு செய்து விட்டு வீட்டிற்கு வந்து சில நிமிடங்களில் மரணம் அடைந்த சம்பவம் ஒன்று நெல்லியடியில் இடம்பெற்றிருக்கிறது.
தனது மகளின் வீட்டில் தயார் மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டு இருந்ததை அவதானித்த மகள் உடனடியாகவே அயலாரின் உதவியுடன் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றபோது அவர் மரணம் அடைந்துள்ளதாகவும் தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த வயோதிபப் பெண்மணியின் உடற்கூற்றுப் பரிசோதனை நாளைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன