கச்சைதீவை மீளப் பெறுவதன் காரணமாக எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம். பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் முகஸ்டாலின் இடம் தெரிவிப்பதாக சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.
கச்சதீவு மீட்பு தொடர்பாக தமிழக மீனவர் சார்ந்த கருத்தை தமிழ் நாட்டு முதல்வர் மு.கா ஸ்ராலின் தெரிவித்ததிற்கு தேசிய ரீதியாக அண்ணாமலையும் ஆதரித்து இருந்தார். ஆனால் உண்மையான நிலை எனனவென்றால் ஸ்டாலினை பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் தலைவராக நாம் பார்ப்க்கின்றோம்.உலகத் தமிழர்களாக பார்க்கின்ற பொழுது இலங்கைத் தமிழர்களும் ஒன்றுதான் இந்தியா தமிழர்களும் ஒன்றுதான் தமிழர்களை பாக்கு நீர் பிரிவு தவிர எங்களுடைய மீனவர்களும் இந்திய மீனவர்களும் ஒன்றுதான் என தெரிவித்தார்.
*எங்களுடைய மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினை தமிழக மீனவர்களை தவிர நம் நாட்டினுடைய தெற்குப்பகுதி மீனவர்களுடைய பாதிப்பும் எங்களுடைய வடக்கு மீனவர்களுக்கு இருக்கின்றது. மட்டக்களப்பிலிருந்து முல்லைத்தீவு வரையான கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் எங்களுடைய வளங்களை சுரண்டிக் கொண்டு செல்கின்றார்கள்இதனால் எங்களுடைய தமிழ் மீனவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள் இதன்காரணமாக சுயாதீனமாக நம்மவர்கள் கடற்தொழில் மேற்கொள்வதற்கு நெடுந்தீவு பகுதி கச்சதீவு களமாக இருக்கின்றது இவ்வாறான நிலையில் கச்சதீவை மீளப்பெறுவது என்பது எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் முகஸ்டாலின் இடம் தெரிவிப்பதாக சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க செய்த புண்ணியத்தினால் பதுங்கி இருந்தவர்கள் பாராளுமன்றம் சென்று சுயாதீனமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இது ரணில் விக்கிரமசிங்க செய்த பிழை என தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவோ பசில் ராஜபக்சவோ இனிமேல் பிரதமர் பதவிக்கு வர முடியாது ஆனால் பிரதமர் பதவியினை தீர்மானிப்பது பெரமுன கட்சியாகவே அமையும் என சி.வி.கே சிவஞானம் தெரிவித்திருந்தார். 21ம் சீர்திருத்தம் என்பது எங்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை என தெரிவித்தார்.
ஐனாதிபதியின் அபரிமிதமான அதிகாரத்தை தக்க வைப்பதே 21ம் சீர்திருத்தம்.
ரணில் விக்கிரமசிங்க நல்ல நோக்கத்துடன் வந்தாலும் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்படும். கவலைப்படுவார் என தெரிவித்தார்.