
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் இன்றைய தினம் வியாழக்கிழமை வீதியின் அருகே இருந்த வேலிக்கு பாய்ந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
அதிவேகமாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வேலிக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் வரணி பகுதியில் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.