
வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது



யாழ் வடமராட்சி கரவெட்டி குஞ்சர் கடை கண்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் செலுத்திக் கொண்டிருந்த மாணவனிற்க்கு முன்னால் மாடு ஒன்று குறுக்காக சென்றதாகவும் ,இதனால் பதட்டமைந்த மாணவன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாகவே காயமடைந்த மாணவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது மருத்துவ மனையில் மரணமடைந்துள்ளதாகவும். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகலை நெல்லியடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் தற்போது உரிய விசாரணைகளுக்காகவும், உடற்கூற்று பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்து சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணமடைந்துள்ளான்.
குறித்த நபர் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.