சத்தியலிங்கத்துக்கு அழைப்பானை மாவை, குலநாயகம் நீதிமன்றில் பிரசன்னம் யூன் 17 வரை இலங்கை தமிழரசுக் கட்சியிக்கு தடை…!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் இணை பொருளாளரும் ஆகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளம்செழியனை கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று 03.06.2022 விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது தங்களது ஆட்சேபினையை மன்றுக்கு தெரிவிக்க சந்தர்ப்பத்தை வழங்கி இடைக்கால தடையினை 17.06.2022 நீடிக்கப்பட்டது.

இவ் வழக்கு விசாரணையானது யாழ். மாவட்டநீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருளாளரும் , மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளம்செழியன் தம்மை கட்சியில் இருந்து, இலங்கை தமிழரசு கட்சி பதில் பொது செயலாளர் ப. சத்தியலிங்கம் நீக்கியது தவறு என யாழ். மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஊடாக மனுத்தாக்கல் செய்திருந்தார்

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நிர்வாக செயலாளர்
சூ. சேவியர் குலநாயகம் மட்டும் இன்று நீதி மன்றில் பிரசன்னமாகியிருந்தார். பதில் பொது செயலாளர்  ப.சத்தியலிங்கம் நீதிமன்றில் பிரசன்னமாகவில்லை.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரதிவாதிகளாக இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்ற கட்டானையை இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், இன்று வரை பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஆகவே அவருக்கு பகிரங்க அழைப்பானை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews