
வேலணை மண்கும்பான் பகுதியில் சுமார் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மண்கும்பானில் உள்ள ஓர் வீட்டில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
இதன்போது 4 மூடைகளில் சுமார் 120 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு அதனை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.