பொருளாதார நெருக்கடியிலும் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்த பெருமை.

உலக வங்கி மற்றும் எஸ் என்ட் பீ. சர்வதேச சந்தை புலனாய்வு மற்றும் நிதி சேவை (S&P Global Market Intelligence and Financial Services)ஆகியவற்றின் வருடாந்த அறிக்கையில் 2021 ஆம் ஆண்டு தொடர்பான இரண்டாவது பதிப்பில் கொழும்பு துறைமுகம் தெற்காசியா மற்றும் இந்திய உப கண்டத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம் என தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் எல்லைக்குள் இருக்கும் துறைமுகங்களில் மூன்றாவது இடத்திலும் உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22 வது இடத்திலும் கொழும்பு துறைமுகம்தரப்படுத்தப்பட்டுள்ளது.

சமுத்திர துறைமுகம் எப்படி செயற்படுகிறது என்பது ஒரு நாட்டின் சர்வதேச வர்த்தகத்தின் முக்கியமான அங்கம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் முனையங்கள் குறிப்பாக கொள்கலன்கள் கப்பல்களுக்கு ஏற்றப்படுவது தாமதமாகுதல், விநியோக சீர்குலைவு, மேலதிக செலவுகள் மற்றும் போட்டி தன்மை குறைந்துள்ளமை என்பன துரதிஷ்டவசமானவை.

கொழும்பு துறைமுகம் உலகில் பெறுமதியான கேந்திர மையத்தில் இருந்தாலும் பல்வேறு துறைமுகங்களின் செயல் திறனை ஒப்பிடும் போது நம்பகமான, நிலையான மற்றும் ஒப்பிடக் கூடிய அடிப்படைகள் இல்லாததே துறைமுகத்தின் முன்னேற்றம் தொடர்பாக எதிர்நோக்கப்படும் முக்கிய சவால் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews