
யாழ் வடமராட்சி கிழக்கு அம்பன் பாடசாலையில் இடம் பெறும் சீனோபாம் கொரோணா தடுப்பு ஊசி வழங்கும் செயறறிட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது இதில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள்,தாதியர்கள், குடும்பநல உத்தியோகஸ்தர்கள், என அதிகாரி களும் இராணுவத்தினரும் இணைந்து குறித்த கொரோணா தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அம்பன்,குடத்தனை உட்பட்ட மக்கள் வீதி திருத்த பணியில் ஈடுபடுபவர்கள் என இதுவரை முந்நூற்றிற்க்கு மேற்பட்டோர் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளனர்