இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 100% அதிகரிப்பு என அதன் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார். கடந்த வருடம் 122,000 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வெளியேறியுள்ளனர். இவ்வருடம் 300,000 பேரை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப பணியகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பல நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் மங்கள ரந்தெனிய மேலும் தெரிவித்தார்.