கடந்த 29/05/2022 அன்றைய தினம் திடீர் மரணமடைந்த
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பின் வடமராட்சிக்கிழக்கு ஒருங்கிணைப்பாளரான மேரி பற்றிமா (புஷ்பராணி) அவர்களது உடலம் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி வடக்கை சேர்ந்த மேரி பற்றிமா புஸ்பராணி அருளானந்தம் அவர்கள் கடந்த 2017 ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் வலிந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சாரஸபிலும் தனது மகனை தேடியும் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு தனது மகனை தேடிய நிலையில்
திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நிலையில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமரரது உடலம் அவரது இல்லதிலிருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் இறுதி வணக்க வழிபாடுகள் இடம் பெற்று தாளையடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அமரர் மேரி பற்றிமா புஸ்பராணி அவர்களின் ஒரு பிள்ளை சுனாமியிலும், ஒரு பிள்ளைகள் யுத்தத்திலும், ஒரு பிள்ளை காணாமல் போயும் ஒரு மகன் விபத்திலுமாக நான்கு பிள்ளைகள் இல்லாத நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டதனது மகனை தேடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 29/05/2022 அன்று சாவகச்சேரி மருத்துவ மனையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருந்தார்.
இது வரை தமது பிள்ளைகளை தேடித் தேடி அலைந்தும் பிள்ளைகள் கிடைக்காத நிலையில் மரணமடைந்த பல பெற்றோரின் வரிசையில் அமரர் திருமதி மேரி பற்றிமா புஸ்பராணி அருளானந்தமும் இணைந்து கொண்டார்.