
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில் (04) கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே உள்ள பெயர் பலகையில் மோதுண்டுள்ளது.

குறித்த விபத்து இன்று (04) காலை புதுக்காட்டுச்சந்தி ஏ9வீதியில் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் 1990அம்புலன்ஸ் வண்டி மூலம் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்