நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயக் குழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும்.
இதில் இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளன. வயது ஏற ஏற விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும்.
பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் ரத்த உறைதல் எதிர்ப்பு குணங்களால் இதயத்துக்குள் ரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.
பச்சை பூண்டை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.
நம் ரத்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் தமனி பிளேக் உருவாக்கத்தை குறைக்கும் தன்மையும் பூண்டில் அதிகமாக உள்ளது.