
திருச்சி தமிழ்நாடு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி இன்று 17 ஆவது நாளாக நீரை மட்டும் அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.



இந்நிலையில் இன்றைய தினம் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கக்கூடிய 104 ஈழத்தமிழர்களும், தங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது எங்களைக் கருணைக் கொலை செய்யுங்கள் என்று இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறிப்பாக நீரை மட்டும் அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற 17 பேரும் தங்களை கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தது மட்டுமின்றி தங்களுடைய உடல் உறுப்புகளை தமிழ்நாட்டு மக்களுக்கு தானம் செய்யுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் தங்களுடைய போராட்டத்திற்கு தொடர்பில் எந்தவிதமான கரிசனையும் கொள்ளவில்லை என்றும், இதனால் தங்களுடைய 17 உண்ணாவிரதப் போராட்ட காரர்களும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும்
அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு கூட அதிகாரிகள் அக்கறை எடுக்கவில்லை என்றும் அங்கு இருக்கின்ற தகவல்கள் அங்கிருந்து தெரிவிக்கின்றனர்.