
இந்திய தமிழ் நாடு திருச்சி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 17 நாட்களாக தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் என நீரை மட்டும் அருந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஈழத் தமிழ் அகதிகள் 17 பேரும் இரவு திருச்சி அரசு மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


கடந்த 17 நாட்களாக நீரை மட்டும் அருந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 17 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவர்கள் சற்றுமுன் நோயாளர் காவு வண்டி மூலம் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
முன்னதாக நேற்று காலை குறித்த தடுப்பு முகாமில் உள்ள 104 ஈழ தமிழ் அகதிகளும் தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணை கொலை செய்யுங்கள் எனவும் தமது உடல் உறுப்புக்களை தமிழ் நாட்டு உறவுகளுக்கு தானம் வழங்குவதாகவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிட தக்கது.