சிவசிதம்பரத்தின் 20 வது நினைவேந்தல் நேற்று இடம் பெற்றது…..!

தமிழர்களின் மாபெரும் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவரும், ‘உடுப்பிட்டி சிங்கம்’ என புகழப்பட்டவருமான அமரர் மு. சிவசிதம்பரத்தின் (நல்லூர் சிவா) 20 ஆவது நினைவு தினம் நேற்றாகும். சிம்மக் குரலோன்’ எனவும் ‘உடுப்பிட்டி சிங்கம்’ எனவும் ‘தலைவர் சிவா’ கொள்கைப் பற்றுடன் இறுதி வரை வாழ்ந்த ஒரு சிறந்த தலைவர்  மணியகாரன் பரம்பரையில் வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்த அவர் பல பெரிய பதவிகளைப் பெற்றிருக்கக் கூடிய நிலையில், அவற்றை எல்லாம் உதறி வாழ்ந்த உத்தமர். தனது உடைமைகளை 1983 கலவரத்தில் முற்றாக இழந்த நிலையில் வாழ்ந்துவந்தவர்.

1956ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பருத்தித்துறையில் போட்டியிட்டு தோல்வியடைந்த மு.சிவசிதம்பரம் ‘சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்’ மற்றும் அரசுக்கு எதிரான வேலைநிறுத்த எதிர்ப்புப் போராட்டங்களில் கட்சி வேறுபாடின்றி ஆதரவு அளித்து வந்தார்.

1960 மார்ச் தேர்தலில் உடுப்பிட்டி தொகுதியில் 7365 வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார். பின் 1960 ஜூலையில் அதே உடுப்பிட்டி தொகுதியில் 9080 வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவானார். 1965இல் 12,009 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகிய சிவசிதம்பரம் 1970இல் 11,662 வாக்குகளைப் பெற்று தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட ஜெயக்கொடியினால் தோற்கடிக்கப்பட்டார்.

1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்பினை எதிர்த்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கிய வேளையில், அதன் இணைச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். 1977இல் நல்லூரில் 29858 வாக்குகளைப் பெற்று (28137 வாக்கு வித்தியாசத்தில் – இலங்கையில் தனி உறுப்பினர் தொகுதியில் அதிகூடியது) வெற்றி பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரானார்.

1989 இல் யாழ் மாவட்டத்தில் 8359 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். கொழும்பில் 1989 July 13 இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று மயிரிழையில் தப்பி சிகிச்சை பெற்ற வேளையிலும் கூட தமக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்காதவர்.

1994 இல் வன்னியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னரும், கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பங்கு கொண்டவர். 1998இல் சுகவீனமுற்ற போது இந்தியாவுக்குச் சென்று தனது குடும்பத்தவர்களுடன் இருந்து கட்சியின் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டவர்.

05.12.2001 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 4 கட்சிகளின் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். வயது முதிர்ச்சி காரணமாக சில நாட்கள் சுகவீனமுற்றிருந்த அவர் 05.06.2002 இல் கொழும்பு வைத்தியசாலையில் காலமானார். அவரது இறுதிக் கிரியைகள் அவரது விருப்பத்தின்படி அவரது சொந்த ஊரான கரவெட்டியில் நடைபெற்று, உடல் தகனம் செய்யப்பட்டது

இன்று நினைவேந்தல் அவரது நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள சிலைக்கு கரவெட்டி முத்திரைகள், ஆதரவாள்கள் ஏற்பாட்டுல் மலர் மாலை அணிவித்தும் மலர் அஞ்சலி செலுத்தியும் நினைவேந்தல் மேற்கொண்டனர்

இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டார்

Recommended For You

About the Author: Editor Elukainews