

தியாகி பொன் சிவகுமாரனின் நாற்பத்தி எட்டாவது நினைவுதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை 4 மணியளவில் கைலாசபதி கலையரங்கின் முன்பாக மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தற்கொடையாளர் பொன் சிவகுமாரனின் நினைவுப் பகிர்வு மாணவர்களால் முன்னெடுக்க பட்டதோடு பொன் சிவகுமாரன் உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதோடு மலரஞ்சலி செலுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.