வடக்கு கிழக்கு மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையின் பெயரில் இந்தியாவில் இருந்து மண்ணெண்ணை எடுத்து வரும் ஏற்பாட்டில் இந்தியத் தூதரகம் மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி நிலைமயினால் மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மீனவர்களும், விவசாயிகளும், தற்போது 400 ரூபாவிற்கு கள்ளச் சந்தையில் மண்ணெண்ணையை பெறும் அவலம் உள்ளதாக யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்பிரகாரம் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் பாவனைக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணை எடுத்து வர யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு எடுத்து வரப்படும் மண்ணெண்ணை விவசாயிகளிற்கும், மீனவர்களிற்கும், இலவசமாக வழங்க தூதரகம் முன் வந்துள்ளது.
இந்த மண்ணெண்ணை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு எடுத்து வர முடியுமா அல்லது கொழும்பு ஊடாகவே எடுத்து வரப்பட வேண்டுமா என்பது தொடர்பான ஆய்வுகளும் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது கோரிக்கை கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் அடுத்த கட்டப் பணிகள் இடம்பெறுவதனை உறுதி செய்தனர்.