பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தவிர்க்க முடியாது. இன்னும் சில தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வரி அதிகரிப்பு காரணமாகவு பால் மாவின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பைக்கெற் 1020 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் பால் மா பைக்கெற் 2545 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.