நான் தோல்வியடைந்த ஐனாதிபதி அல்ல! நாட்டை மீண்டும் ஸ்தாபிப்பேன், ஐனாதிபதி.. |

தோல்வியடைந்த ஐனாதிபதியாக பதவி விலகபோவதில்லை. அதேபோல் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகபோவதில்லை மக்கள் தமக்கு 5 வருடகால ஆணை வழங்கியுள்ளனர்.

எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிப்பேன். நாட்டை சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளேன்.

ஏற்கனவே வழங்கிய வெற்றிகரமான சேவையை மீள ஸ்தாபிக்க விரும்புகிறேன். 6 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இலங்கைக்கான உதவிக்காக இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல தரப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஓமானிடம் இருந்து நீண்ட கால எரிபொருள் ஒப்பந்தத்தை எதிர்பார்த்துள்ளேன்.

சலுகை கொடுப்பனவுகள் ரத்து செய்யப்பட வேண்டும். இராணுவத்துக்கும் பொது சேவைக்குமான ஒதுக்கத்தை குறைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருந்தால் முழுமையான அதிகாரம் காணப்பட வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அதனை முழுமையாக ரத்து செய்துவிட்டு

வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews