
கண்டி மாவட்டம் புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடகம பிரதேசத்திலுள்ள அமுனுவல வாவியில் நீராட சென்ற இரு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணமால் போயுள்ளதாக புஸ்ஸல்லாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நவோதவிட்ட, கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சிறுவனை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்