சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட விருந்தகங்களில் வெளிநாட்டு நாணய அலகுகளில் கொடுக்கல், வாங்கல்களை செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலானது இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்த பல வெளிநாட்டவர்கள் அதனை இரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியே அதற்கான காரணம் என கூறப்படுகின்றது.
35 முதல் 40 வீதமான வெளிநாட்டவர்கள் தமது முன்னைய முன்பதிவுகளை இரத்து செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.