
கிளிநொச்சி அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் (07.07.2022) நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.கமநல சேவை நிலையத்திலிருந்த 1500 கிலோ யூரியா கடந்த சனிக்கிழமை காணாமல் போயுள்ளதாகவும் உண்மை நிலையை அதிகாரிகள் தெரிவிக்குமாறு கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டகாரர்கள் யூரியா எங்கே, இராணுவத்திற்கு வழங்கப்பட்டதா அதிகாரிகள் களவா?, எங்கே யூரியா எவர் கைக்கு போனது, எங்களுக்கு சேதனம் உங்களுக்கு யூரியா சீதனமா! என பல பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்னெடுத்திருந்தனர்.