இனறு முதல் முகக் கவசத்திலிருந்து விடுதலை!

நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வியாழக்கிழமை விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று நடைமுறை நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது. எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்த தடையும் இன்றி அதனை அணிந்து கொள்ள முடியும். எனினும், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது பொருத்தமானது என்று தெரிவிக்கப்பட்டது.

தவிர, நாளை முதல் பி.சி.ஆர். – ரெபிட் அன்ரிஜென் பரிசோதனையும் அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews